May 3, 2024

பெண் குழந்தையா ..?? ஆண் குழந்தையா ..?? கண்டுப்பிடிப்பதற்காக அமலா பால் விளையாடிய விளையாட்டு ..!! இது புதுசா இருக்கே ..!!

தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அமலா பால் . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய அமலாபால் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . ஆனால் அதே ஆண்டு வெளியான மைனா படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் ,ஆர்யா நடிப்பில் வெளியான வேட்டை , சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி ,விஜய் நடிப்பில் வெளியான தலைவா, ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் ,

தனுஷ் நடிப்பில் வெளியான வேலை இல்லா பட்டதாரி , சூர்யா நடிப்பில் வெளியான பசங்க 2 போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தை படித்துக் கொண்டார்.இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து ,

திருமணம் செய்து கொண்டார்.  ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டனர்.  இதை அடுத்து பல வருடங்களாக தனியாக இருந்து வந்த அமலா பால் கடந்த வருடம் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந் நிலையில்,

திருமணமான இரண்டு மாதங்களிலேயே கர்ப்பமான அமலா பால் ஆண் குழந்தையா .? பெண் குழந்தையா .? என்பதை அறிவதற்காக கணவருடன் சேர்ந்து ஒரு விளையாட்டு விளையாடி இருக்கிறார் . அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *