April 29, 2024

விஜய்க்கு தங்கையாகும் 23 வயது நடிகை ..!! அப்போ சென்டிமென்ட்டுக்கு பஞ்சமே இருக்காது ..!! யார் அந்த அதிர்ஷ்டசாலி நடிகைனு நீங்களே பாருங்க ..!!

தற்போது லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய் . இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த் ,பிரபுதேவா, மைக் மோகன், சினேகா ,லைலா ,மீனாட்சி சவுத்ரி போன்ற பல நடிகர் ,நடிகைகள் நடிக்க உள்ளனர் . ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ,

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக 23 வயது க்யூட் நடிகை ஒருவர் கமிட் ஆகியுள்ளாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகை இவானா தான் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவானா ,

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான நாச்சியார் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த வருடம் வெளியான,

லவ் டுடே படத்தின் மூலம்தான் . இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  இப்படி இருக்கும் நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கையாக கமிட் ஆகியுள்ளார் நடிகை இவானா . இதனால் இந்த படத்தில் சென்டிமென்ட்க்கு,

பஞ்சமே இருக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை பாசமலர் 2 படம் கீது எடுப்பார்களோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *