April 28, 2024

ஹாலிவுட் நடிகர் போல மாறிய அஜித் ..!! இந்த கெட்டப்பில் சூப்பரா இருக்கிறாரே..!! தீயாய் பரவும் புகைப்படம் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் அஜித்.  எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் இன்று சினிமாவில் தனித்து நிற்கிறார் நடிகர் அஜித்.  மேலும் துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல மாதங்கள் கழித்து தான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் நடிகர் அஜித் . இயக்குனர் மகில் திருமேனி இயக்கத்தில் ,

உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன் ,திரிஷா ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது . மேலும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார் .

பொதுவாகவே அஜித் சமூக வலைத்தளப்பக்கத்தில் தலை காட்ட மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . குறிப்பாக சில வருடங்களுக்கு முன்பு இவருடைய ஒரு புகைப்படம் வெளியானாலே அது அதிசயம் என்பது போல தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் .

ஆனால் பப்ளிசிட்டி பிடிக்காது என்று சொல்லிய அஜித் அண்மைக்காலமாக தினம் ஒரு புகைப்படமாவது வெளியிட்டு வருகிறார் .  அப்படி ஹாலிவுட் நடிகர் லுக்கில் புகைப்படம் ஒன்றை எடுத்து இருக்கிறார் நடிகர் அஜித்.  அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ,

தீயாய் பரவி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இந்த கெட்டப்பில் அஜித் சூப்பராக இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *