April 29, 2024

சின்ன பசங்க கூட அப்படி தான் கூப்பிடுறாங்க ..!! வேதனையை பகிர்ந்த நடிகை திவ்யா துரைசாமி ..!! எல்லாத்துக்கும் காரணமே இந்த புகைப்படம் தான் ..!!

திவ்யா துரைசாமி ஓர் வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை திவ்யா துரைசாமி . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தின் மூலம் தான் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மதில், குற்றம் குற்றமே, சஞ்சீவன், ப்ளூ ஸ்டார் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை திவ்யா துரைசாமி . அதோடு தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் வாழை என்ற படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார்,

நடிகை திவ்யா துரைசாமி . மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் திவ்யா துரைசாமி , அவ்வபோது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய  பேட்டி ஒன்றில் அது குறித்து பேசிய திவ்யா துரைசாமி,

கூறியதாவது,  டெஸ்ட்லா  என்கிற வார்த்தையை எங்கிருந்து கண்டுபிடித்தார்கள் என்று எனக்கு தெரியல,  அந்த விஷயம் வைரலான நேரத்தில் படப்பிடிப்பில் சின்ன பசங்க கூட என்னை டெஸ்ட்லா  அக்கா என்று தான் அழைத்தார்கள்.  இன்னும் சொல்ல போனால் படப்பிடிப்பில்,

இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், படக்குழுவினர்கள் எல்லோருமே என்னை டெஸ்ட்லா என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.  இருந்தாலும் அதையெல்லாம் நான் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறேன் என்று கூறியிருந்தார் நடிகை திவ்யா துரைசாமி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *