April 30, 2024

கண்ணா இது எப்படி இருக்கு ..?? இணையத்தை கலக்கும் சூப்பர் ஸ்டாரின் ஏ ஐ புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தன்னுடைய உடம்பை ஆரம்பத்திலிருந்தே  கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  கிட்டத்தட்ட 72 வயதாகியும் கூட இன்னும் தன்னுடைய உடலை சரியாக பராமரித்து வருகிறார் ரஜினிகாந்த்.  மேலும் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர்  திரைப்படம்,

சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதை அடுத்து ஜெய் பீம் பட இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 160 என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவையே ஆட்சி செய்து,

வருகிறார் ரஜினிகாந்த் . இப்படி இருக்கும் நிலையில் ஏ ஐ என்ற தொழில்நுட்பம் வந்ததிலிருந்து தமிழ் நடிகர் நடிகைகளை வைத்து வித்தியாசமான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.  அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் குஸ்தி வீரன்,

போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.  அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தா  இது .? வேற லெவலில் இருக்கிறாரே என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *