May 2, 2024

கேப்டன் உருவத்தில் இருக்கும் அயோத்தி ராமர் ..!! இதை விட என்ன சிறப்பு வேணும் ..!! வெளியான வீடியோவை பார்த்து மெய்சிலிர்த்த ரசிகர்கள் ..!!

கடந்த மாதம் 28ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் திடீரென மரணம் அடைந்தது ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது . மேலும் இப்படி ஒரு நல்ல நடிகரையும் , நல்ல தலைவரையும் இழந்து விட்டோம் என்று ரசிகர்களும் பிரபலங்களும் கதறி கதறி அழுதனர்.  அதோடு இவருடைய இறுதி அஞ்சலியில் கிட்டத்தட்ட 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் .

இந்தக் கூட்டம் இதுவரை எந்த ஒரு பிரபலங்களுக்கும் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  அதற்கு காரணம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழும் போதே வள்ளலாக வாழ்ந்தது தான்.  குறிப்பாக இவருடைய உடலை கொண்டு செல்லும்போது கழுகு வந்தது ,

இவருடைய சமாதியில் சாமியார் ஒருவர் இவருடைய குரலில் பேசியது போன்ற பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தது . இதை அடுத்து மற்றொரு நிகழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.  அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோவிலின்,

கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.  இந்த விழாவில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் . இதில் சிறப்பு என்னவென்றால் கருவறையில் இருக்கும் ராமரின் உருவம் அப்படியே கேப்டன் விஜயகாந்த் போலவே இருப்பது தான் .

அப்படி ராமர் உருவத்தில் இருந்து கேப்டன் உருவமாக மாறும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.  அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மெய் சிலிர்த்து வருகின்றனர் . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *