May 2, 2024

சிறு வயதிலேயே மகளை பறிகொடுத்த பாடகி சித்ரா அம்மாவின் மகளின் புகைப்படங்கள் ..!!

சித்ரா ஓர் பிரபலமான இந்திய திரைப்பட பின்னணி பாடகி ஆவார் . சிந்து பைரவி என்ற படத்தின் மூலம் பாடகியாக  அறிமுகமான சித்ரா முதல் படத்திலேயே சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை வென்றார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக தமிழ் ரசிகர்கள் இவரை” சின்ன குயில்” சித்ரா,

என்று அழைத்து வந்தனர் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம்,  பெங்காலி போன்ற பல மொழிகளிலும் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் . இதனிடையே கடந்த 1988 ஆம் ஆண்டு விஜய சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி பல வருடங்கள் கழித்து தான் இவருக்கு நந்தனா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது . அப்படி பிறந்த தன்னுடைய ஒரே மகளை பார்த்து பார்த்து கவனித்து வந்தார் பாடகி சித்ரா.  ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த 2011 ஆம் ஆண்டு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து ,

இறந்து விட்டார் சித்ராவின் மகள் . அப்படி அந்த துயரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தான் மீண்டு வந்திருக்கிறார் பாடகி சித்ரா.  இந்நிலையில் பாடகி சித்ராவின் ஒரே மகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *