May 3, 2024

இல்லாதவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் ராகவா லாரன்ஸ் ..!! இவர் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா ..?? வெளிவந்த மொத்த சொத்து மதிப்பு விபரம் ..!!

ராகவா லாரன்ஸ் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ,இயக்குனர் மற்றும் நடனக் கலைஞர் ஆவார் . குரூப் டான்ஸராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ராகவா லாரன்ஸ் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் . பின்னர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான அற்புதம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ராகவா லாரன்ஸ் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,

முனி ,ராஜாதி ராஜா, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா ,மொட்ட சிவா கெட்ட சிவா,  சிவலிங்கா போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் ராகவா லாரன்ஸ் . இப்படி ஹீரோவாக கலக்கி கொண்டு வந்த ராகவா லாரன்ஸ்,

ஒரு கட்டத்தில் முனி என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்தார்.  இதைத்தொடர்ந்து காஞ்சனா , காஞ்சனா 2 , காஞ்சனா 3 போன்ற சூப்பர் ஹிட் படங்களையும் இயக்கி இருந்தார் ராகவா லாரன்ஸ்.  மேலும் இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது,

அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அந்த வகையில் இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் தற்போது ட்ரஸ்ட் ஒன்றை நடத்தி வருகிறார்  நடிகர் ராகவா லாரன்ஸ்.  இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில்,

இல்லாதவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் நடிகர்  ராகவா லாரன்ஸின் மொத்த சொத்து மதிப்பு 60 முதல் 80 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *