April 28, 2024

ரஜினி, விஜய் மட்டும் தான் அதை பண்ணுவாங்களா ..?? நானும் அதை பண்ணுவேன் ..!! அஜித் வெளியிட்ட தகவலால் கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்கள் ..!!

சமீப காலமாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரீ ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா, முத்து போன்ற திரைப்படங்களும் , கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படமும், விஜய்யின் கில்லி , சூர்யாவின் வாரணம் ஆயிரம், தனுஷின் 3 போன்ற திரைப்படங்கள் ரீ ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . இதை அடுத்து தற்போது இவர்கள் மட்டும்தான்,

செய்வார்களா நானும் ரீ ரிலீஸ் செய்வேன் என்று அஜித்தும் தன்னுடைய சூப்பர் ஹிட் படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ளாராம்.  அந்த திரைப்படம் தான் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான தீனா திரைப்படம்.  இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ,

அஜித்துடன் இணைந்து சுரேஷ்கோபி ,லைலா ,பாலாசிங் ,வைஷ்ணவி ,சீலா, ஸ்ரீமன், மகாநதி சங்கர் போன்ற பல பிரபஞ்சன் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான  திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் அஜித்துக்கு இந்த படத்தில் இருந்து தான் ,

தல என்ற பெயர் உருவானது . அதுவரை கதைகள் படங்களில் நடித்து வந்த அஜித்துக்கு இந்த படம் ஆக்சன் அவதாரத்தை பெற்றுத்தந்தது . இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் விரைவில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளதாம் .

அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது . இந்த தகவலை பார்த்த அஜித் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *