May 9, 2024

எடுத்தது என்னமோ 5 படம் தான் ..!! ஆனால் சேர்த்து வைத்தது இத்தனை கோடியா ..?? வாய்ப்பிளக்க வைக்கும் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் தன்னுடைய திறமையால் மேலே வந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . குறும்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் என்ற படத்தின் மூலம்,

இயக்குனராக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்த லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி , விஜய்யை வைத்து மாஸ்டர்,  கமலை வைத்து விக்ரம் , மீண்டும் விஜய்யை வைத்து லியோ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை,

கொடுத்திருந்தார் . இதைத் தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படத்தையும் இயக்குனர்  லோகேஷ் கனகராஜ்  தான் இயக்க உள்ளார் . குறிப்பாக இதுவரை ஒரு தோல்வி படம் கூட கொடுக்காத இயக்குனர் என்ற அந்தஸ்திலும் இருந்து வருகிறார் ,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  . அப்படி இதுவரை வெறும் ஐந்து படங்கள் மட்டுமே இயக்கி இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  மொத்த சொத்து மதிப்பு ,

சுமார் 40 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது .  அதோடு அடுத்த படத்திற்கு 50 கோடி சம்பளம் வாங்க உள்ளாராம் லோகேஷ் கனகராஜ் .  இதனால் இவருடைய சொத்து மதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *