April 30, 2024

கதாநாயகி ஆகப்போகும் “பிக்பாஸ்” மாயா ..!! ஹீரோ யார் தெரியுமா ..?? பிக்பாஸ் முடிவதற்குள் இப்படியொரு வாய்ப்பா ..??

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது . மேலும் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த போட்டியாளர் என்றால் அது மாயா தான் . அந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டில் ரசிகர்களை வெறுப்பேற்றும் அளவிற்கு அளப்பறை செய்திருந்தார் மாயா.  ஆரம்பத்தில் மாடலாக இருந்து வந்த மாயா கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான,

வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தொடரி, மகளிர் மட்டும் ,வேலைக்காரன் ,ஏண்டா தலையில எண்ண வைக்கல,2.0  போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில்,

பிரபலமானது கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் தான்.  இந்த திரைப்படம் தான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான லியோ, விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள துருவ நட்சத்திரம் போன்ற,

படங்களிலும் நடித்திருந்தார் மாயா . இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் கதாநாயகியாக போகிறாராம் மாயா.  அந்த வகையில் தமிழில் வெளியான மாவீரன், வெந்து தணிந்தது காடு ,ஜவான் போன்ற பல திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் கலைஞராக,

பணியாற்றியவர் தான் யானிக் பென் . தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.  அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவது மாயா என்று தகவல் வெளியாகி உள்ளது . மேலும் இதில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *