May 2, 2024

ஒரு நாளைக்கு 200 முறையா ..?? கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை பாடாய் படுத்தும் அண்ணாச்சி ..!! ஒரு படம் நடிச்சதுக்கே இப்படியா ..??

தமிழ்நாட்டை கலக்கி வரும் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர்தான் தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான சரவணன் அருள் . சரவணா ஸ்டோர்ஸ் என்ற கடையை நடத்தி வரும் சரவணன் அருள் ஆரம்பத்தில் தன்னுடைய கடை விளம்பர படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் . பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர்கள்  ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் வெளியான தி லெஜன்ட் என்ற,

படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் சரவணன்.  இந்தப் படத்தில் சரவணன் உடன் இணைந்து ஊர்வசி ரவுத்தேலா, பிரபு ,விவேக், யோகி பாபு ,சுமன் ,நாசர் ,விஜயகுமார், லதா ,தம்பி ராமையா ,ரோபோ சங்கர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான,

திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது . அப்படி இருந்தும் அடுத்து ஒரு படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . இப்படி இருக்கும் நிலையில் ஒரு படத்தில் நடித்ததற்கே தன்னுடைய கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை பாடாய் படுத்தி வருகிறாராம்,

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி . அந்த வகையில் தி லெஜன்ட் படத்தில் இடம் பெற்ற ” வாடிவாசல் ” என்ற பாடலை ஒரு நாளைக்கு 200 முறைக்கு மேலாவது ஓடி விடுகிறதாம்.  இதனால் கடைக்கு வரும் பலரும் இந்த பாட்டைக்கேட்டு தெறித்து ஓடுகிறார்களாம்.

வாடிக்கையாளர்களுக்கே இப்படியொரு  நிலை என்றால் அந்த கடையில் வேலை செய்யும் நபர்களுக்கு எப்படி இருக்கும் . அது மட்டுமல்லாமல் இந்தப் பாட்டை மட்டும் நிறுத்தி விடுங்கள் என்று வாடிக்கையாளர்களே கோரிக்கை வைத்து வருகிறார்களாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *