April 30, 2024

வடிவேலுவின் காமெடியை பார்த்துவிட்டு தான் விஜயகாந்த் தூங்குவாரா ..?? உண்மையை சொல்லிய பிரபலம் ..!! என்னா மனுஷன்யா..!!

கேப்டன் விஜயகாந்த் குழந்தை மனசு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  ஆனால் தப்பு என்றால் அவருடைய முகமே அப்படியே மாறிவிடும் . மேலும் விஜயகாந்தால் சினிமாவில் மேலே வந்தவர்கள் பல பேர் உண்டு . அந்த வகையில் ஒருவர் தான் காமெடி நடிகர் வடிவேலு . என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் அறிமுகமான வடிவேலுவுக்கு சின்ன கவுண்டர் படத்தில் வாய்ப்பு கொடுத்திருந்தார்,

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . இதன் பிறகு பின்னாளில் வடிவேலு மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தார் . ஆனால் கேப்டன் செய்த உதவியை நினைத்து கூட பார்க்கவில்லை வடிவேலு . அதுமட்டுமல்லாமல் அப்போது திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன் என்று,

விஜயகாந்தை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்திருந்தார் வடிவேலு . அப்படி இருந்தும் விஜயகாந்த் அவர் மீது கோபமே படவில்லையாம் . இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்த் ,வடிவேலு குறித்த இன்னொரு தகவலை கூறியுள்ளார் நடிகர் இளவரசு.  அந்த வகையில் விஜயகாந்த் படத்தின்,

படப்பிடிப்பின் போது உங்களுடைய அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கு என்று கேட்டிருக்கிறார் இளவரசு.  அதற்கு யாருமே சொல் பேச்சு கேட்க மாட்டேங்கிறாங்க,  நம்ம ஒன்னு சொன்னா வெளிய ஒன்னு வருது.  ஒரே டார்ச்சர் இருக்குது . நான் இப்ப வடிவேலுவின் காமெடியை பார்த்து ,

சிரித்து விட்டு தான் தூங்கவே போகப்போறேன் என்று கூறினாராம் விஜயகாந்த்.  இதைப் பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு மனிதர் இனி சினிமாவில் வருவதற்கு வாய்ப்பே கிடையாது என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *