April 29, 2024

கல்யாணமான நாளிலிருந்து இப்போது வரை ..!! சிவகார்த்திகேயனும், அவருடைய மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்..!!

சிவகார்த்திகேயன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிவகார்த்திகேயன் மெரினா என்ற படத்தின் தன்னுடைய திரைப்பயணத்தை  தொடங்கி குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரைட் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் சிவகார்த்திகேயன்.  குறிப்பாக இவருடைய ஒவ்வொரு திரைப்படங்களையும் ,

குடும்ப ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . அதோடு வருகின்ற பொங்கலுக்கு இவருடைய நடிப்பில் ,

உருவாகியுள்ள அயலான்  திரைப்படம் வெளியாக இருக்கிறது . இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டு தன்னுடைய உறவினர் பெண்ணான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர் .

மேலும் திருமணமாகி கிட்டதட்ட 13  வருடங்கள் ஆனாலும் சிவகார்த்திகேயனுக்கு அவருடைய மனைவி மீது இன்னும் காதல் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு தன்னுடைய மனைவியை நன்றாக பார்த்துக் கொள்கிறார் சிவகார்த்திகேயன் .

இப்படி இருக்கும் நிலையில் அப்போதிலிருந்து இப்போது வரை சிவகார்த்திகேயனும்,  அவருடைய மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *