April 30, 2024

நடிப்பில் மட்டுமல்ல , படிப்பிலும் கில்லி தான் ..!! ” பிக்பாஸ் ” அர்ச்சனாவின் 10 ம் வகுப்பு , 12 ம் வகுப்பு மதிப்பெண்ணை கேட்டு ..!! வாய்ப்பிளந்த ரசிகர்கள் ..!!

வி ஜே அர்ச்சனா ஓர் பிரபலமான சின்னத்திரை சீரியல் நடிகை ஆவார்.  ஆரம்பத்தில் விஜேவாக சன் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த அர்ச்சனா கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி 2 என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார்.இப்படி இவர் நடித்த முதல் சீரியலே  இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .

அப்படி இந்த சீரியலில் காமெடி வேடத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து தேன்மொழி பி ஏ ,இந்திரா போன்ற சீரியல்களில் நடித்திருந்தார் நடிகை வி ஜே அர்ச்சனா . இதை அடுத்து தற்போது பிக் பாஸ் சீசன் 7 வைல்ட் கார்டு,

போட்டியாளராக கலந்து கொண்டார்  நதியி விஜே அர்ச்சனா . ஆரம்பத்தில் அலுமுஞ்சி என்று பெயர் எடுத்த அர்ச்சனா போகப்போக சகப் போட்டியாளர்களை அலற வைத்தார் . இன்னும் சொல்லப்போனால் தற்போது வி ஜே அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்று,

உறுதியே ஆகிவிட்டது.  இப்படி இருக்கும் நிலையில் நடிகை வி ஜே அர்ச்சனாவின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் பத்தாம் வகுப்பில் அர்ச்சனா 491 மார்க் எடுத்து சாதனை படைத்திருக்கிறார்.

அதோடு பன்னிரண்டாம் வகுப்பில் 1௦௦5 மதிப்பெண் எடுத்து இருக்கிறார் நடிகை விஜே அர்ச்சனா . இதைப் பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் அச்சுனா படிப்பாளி போல என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *