April 30, 2024

அன்று பேச்சு போட்டியில் பர்ஸ்ட் ப்ரைஸ் ..!! இன்று இவருடைய பேச்சுக்கு ஊரே கிளாப்ஸ் ..!! வைரலாகும் பிரபலத்தின் சிறுவயது புகைப்படம் ..!!

கோபிநாத் ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர், ரேடியோ ஜாக்கி , நடிகர் மற்றும் எழுத்தாளர்  ஆவார் . ஆரம்பத்தில் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த கோபிநாத் பின்னர் விஜய் டிவிக்கு தொகுப்பாளராக மாறினார் . அப்படி இவர் தொகுத்து வழங்கிய “நீயா நானா” நிகழ்ச்சி இவரை தமிழ் மக்கள் மத்தியில்  பெரிய அளவில் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் .

குறிப்பாக கடந்த 2006 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இப்போது வரை வெற்றிக்கரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது . மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவரை “நீயா நானா ” கோபிநாத் என்றும் ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள் . இவர் இந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல்,

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.  அது மட்டுமல்லாமல் இவர் தமிழில் வெளியான வாமனன், தோனி, நிமிர்ந்து நில் , திருநாள் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி ஒரு பேச்சாளராக ,

தமிழ் மக்கள் எல்லோரையும் கவர்ந்த கோபிநாத்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  அந்த வகையில் சிறுவயதில் மேடையில் பேசும்போது எடுத்த புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார் நீயா நானா கோபிநாத்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம கோபிநாத்தா  இது .? சிறுவயதிலேயே பயங்கரமான பேச்சாளர் போல என்று கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *