April 26, 2024

14 வயதிலேயே கதாநாயகியான குஷ்பூவின் இளம் வயது புகைப்படங்கள் இதோ ..!!

90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை குஷ்பூ . கடந்த 1998 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை குஷ்பூ . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வருஷம் 16 ,பாட்டுக்கு நான் அடிமை, கிழக்கு வாசல் ,மைக்கேல் மதன காமராஜன், நடிகன், சின்னத்தம்பி ,ரிக்சா மாமா ,

அண்ணாமலை போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள்  மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  குறிப்பாக அப்போது தமிழ் ரசிகர்களின் கனவுகன்னியாகவும் இருந்து வந்தார் நடிகை குஷ்பூ . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு,

மலையாளம் ,கன்னடம் என்று 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே இயக்குனரும் நடிகருமான சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பூவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  மேலும் திருமணமாகியும் சின்னத்திரை மற்றும்,

வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகை குஷ்பூ . இப்படி இருக்கும் நிலையில் 14  வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமான குஷ்பூவின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதோ அந்த  புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *