May 6, 2024

நம்ம மைக் மோகனா இது ..?? 67 வயதிலும் எப்படி இருக்கிறார் பாருங்க ..!! வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

எண்பதுகளில் முன்னணி நடிகர்களாக கலக்கிக்கொண்டு வந்த ரஜினி , கமலுக்கே தண்ணி காட்டியவர் தான் நடிகர்  மைக் மோகன் . அந்த வகையில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான மூடுபனி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் மோகன் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை,

இளமை காலங்கள் ,நூறாவது நாள் ,நான் பாடும் பாடல் ,24 மணி நேரம் , பிள்ளை நிலா  என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் மோகன் . குறிப்பாக அப்போது பெரும்பாலான படங்களில் இவர் மைக்  பிடித்து ,

பாடியதால் தமிழ்  ரசிகர்களால் அன்போடு மைக் மோகன் என்று அழைக்கப்பட்டு வந்தார்.  இப்படி புகழின் உச்சத்திற்கே சென்ற நடிகர் மைக் மோகன் திடீரென காணாமல் போனார்.  இப்படி பல வருடங்களாக தமிழ் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்த மோகன்,

தற்போது ஹரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் மைக் மோகன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *