April 28, 2024

தனுஷின் அக்காவை மருத்துவராக்கியதே விஜயகாந்த் தானா ..?? கேப்டன் இறந்ததற்கு பிறகு வெளிவரும் உண்மை ..!! தனுஷின் அக்கா போட்ட உருக்கமான பதிவு ..!!

கேப்டன் விஜயகாந்தை பொறுத்தவரை அவரால் பலன் அடைந்தவர்களே அதிகம் என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி விஜய் , சூர்யா போன்ற பல சினிமா பிரபலங்களை வளர்த்து விட்ட விஜயகாந்த் தனுஷின் அக்காவை மருத்துவராகி அழகு பார்த்திருக்கிறார் . அந்த வகையில் தனுசுக்கு இரண்டு அக்காக்கள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . அதில் ஒருவரான கார்த்திகா,

தற்போது மருத்துவராக இருக்கிறார் . ஆனால் இவர் 12 ஆம் வகுப்பில் கொஞ்சம் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் அரசு மருத்துவக் கல்லூரியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லையாம் . அந்த நேரத்தில் தனுஷின் அப்பாவுக்கும் இவரை தனியார் கல்லூரியில் படிக்க வைக்க வசதி இல்லையாம்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக்கொண்டிருந்தாராம் .  அந்த நேரத்தில் எதர்ச்சியாக கஸ்தூரிராஜாவின் வீட்டிற்கு சென்று இருக்கிறார் விஜயகாந்த் . பின்னர் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட விஜயகாந்த் உடனடியாக ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் ,

தனுஷின் அக்கா படிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தது மட்டுமல்லாமல் அதற்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டாராம்.  அப்படி கேப்டனால் மருத்துவரான தனுஷின் அக்கா அவர் செய்த நன்றியை மறக்காமல் தற்போது உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *