May 3, 2024

ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த போண்டாமணி திடீர் மரணம் ..!! மனுஷன் நல்லா தானே இருந்தாரு ..!! வெளிவந்த அதிர்ச்சி தகவல் ..!!

போண்டாமணி ஓர்  பிரபலமான தமிழ் திரைப்பட துணை நகைச்சுவை நடிகர் ஆவார்.  கடந்த 1991 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியான பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் போண்டாமணி.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து முத்து ,அருணாச்சலம், சுயம்வரம் ,ரன் ,வசீகரா ,திருமலை ,எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி ,ஐயா, தாமிரபரணி ,வின்னர்,படிக்காதவன் , வேலாயுதம் ,

என்று மொத்தம் 270 படங்களில் நடித்திருக்கிறார் . மேலும் இவர் அதிகம் வடிவேலுவுடன் துணை காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . குறிப்பாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை துணை நடிகர்களுக்கு அவ்வளவு பெரிய சம்பளம் கிடைப்பதில்லை,

என்றுதான் சொல்ல வேண்டும் . கிட்டத்தட்ட போண்டாமணி 30 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருந்தும் கூட இவரால் ஒரு சொந்த வீடு கூட வாங்க முடியவில்லை . இந்நிலையில் சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போண்டாமணி பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்.

இப்படி இருக்கும் நிலையில் நேற்று வீட்டில் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார்  நடிகர் போண்டாமணி . பின்னர் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர் . பின்னர் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் .

தற்போது நடிகர் போண்டாமணியின் திடீர் மறைவிற்கு பிரபலங்களும் , ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *