April 30, 2024

சூப்பர் ஸ்டார்னா சும்மாவா ..?? ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை புரட்டி எடுக்கும் ரஜினி ..!! ட்ரெண்டாகும் ஏ ஐ புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி  வரும் மூத்த முன்னணி நட்சத்திரம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  இவர் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் . பின்னர் இந்த படத்தை முடித்த கையோடு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 171 என்ற படத்தில்,

நடிக்க இருக்கிறார் ரஜினி . பின்னர் இந்த படத்தை முடித்த கையோடு இயக்குனர்  மாரி செல்வராஜ் இயக்க உள்ள புதிய படத்திலும் , இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த் . இதை அடுத்து விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்,

மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.  மேலும் தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஹீரோவாக இருந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர் மேன்,

பேட்மேன் ,ஹல்க்,  சூப்பர் மேன் போன்ற பல பிரபலங்களை புரட்டி எடுப்பது போல ரசிகர் ஒருவர் எடிட் செய்து இருக்கிறார் . அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *