May 12, 2024

வளர்ச்சியை கெடுப்பதற்கு இப்படியொரு நாடகமா ..?? அன்று மைக் மோகனுக்கு நடந்த கொடுமை ..!! இன்று சிவகார்த்திகேயனுக்கு நடக்கிறது ..!!

சினிமாவை பொறுத்தவரை அதிர்ஷ்டம் என்பதை தாண்டி அந்த இடத்தை எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தக்க வைத்துக் கொள்வது தான் பெரிய விஷயமே . அப்படி தமிழ் சினிமா உலகில் எந்த ஒரு சினிமா பின்புலமும்  இல்லாமல் தன்னுடைய திறமையால் மேலே வந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.  இன்னும் சொல்லப்போனால் தற்போது டாப் 10 நடிகர்கள் பட்டியலில் நடிகர் சிவகார்த்திகேயனும்,

இடம் பெற்று இருக்கிறார் . இது ஒரு சில நடிகர்கள் உட்பட பல பேருக்கு பொறாமையை ஏற்படுத்தியிருக்கிறது  என்று தான் சொல்ல வேண்டும் . இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்த டி இமான் அவர் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டை,

வைத்திருக்கிறார் . அது மட்டுமல்லாமல் அவர் செய்த துரோகத்தை நான் எந்த காலத்திலும் மன்னிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.  இப்படி தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல பெயருடன் இருந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த பிரச்சனை அவருடைய பெயரை பெரிய அளவில்,

கெடுத்திருக்கிறது . ஆனால் இதுபோன்று நடிகர் மைக் மோகனின் வளர்ச்சியை கெடுப்பதற்கும் ஒரு நாடகம் நடந்திருக்கிறது . அந்த வகையில் ரஜினி , கமலுக்கு இணையான ஒரு நடிகராக கொடி கட்டி பறந்து வந்த மோகனுக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்றும் , அவர் பெண்கள் விஷயத்தில் வீக்,

என்றும்  சொல்லி அவருடைய மார்க்கெட்டையே காலி செய்தார்கள் . அதேபோன்றுதான் தற்போது சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை காலி செய்ய இது போன்ற தவறான தகவல்கள் பரவி வருகிறது என்று கூறப்படுகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *