May 5, 2024

சுத்தமா மார்க்கெட்டே இல்ல ..!! தமன்னாவை போல சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த 41 வயது நடிகை ..!! அப்ப கவர்ச்சி பஞ்சமே இருக்காது ..!!

சினிமாவைப் பொறுத்தவரை கல்யாணம் ஆகிவிட்டால் நடிகைகளுக்கு மார்க்கெட் குறைந்து விடும் . அப்படி மார்க்கெட் குறைந்து விட்டதால் எப்படி ஜெயிலர் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி தமன்னா ரீ என்ட்ரி கொடுத்தாரோ,  அதேபோல சூப்பர் ஸ்டாரின் படத்தில் இணைந்துள்ளார் 41 வயது நடிகை ஒருவர்.  அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஸ்ரேயா தான்.  தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் திரைப்பயணத்தை தொடங்கிய,

ஸ்ரேயா கடந்த 2௦௦3ஆம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே  பெரிய அளவில் பிரபலமானது ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை படத்தின் மூலம் தான் . பின்னர் இந்த படத்தை,

தொடர்ந்து திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி ,அழகிய தமிழ் மகன் ,தோரணை ,கந்தசாமி, குட்டி ,ரௌத்திரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை ஸ்ரேயா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம்,

ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்  ஸ்ரேயா  . திருமணமான இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.  இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு மார்க்கெட் இல்லாததால்,

பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட உள்ளாராம் ஸ்ரேயா.  இந்த படத்திற்காக ஒரு கோடி சம்பளம் வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  இதைப் பார்த்த ரசிகர்கள் அப்ப கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *