April 28, 2024

பல ரும் பா ர்த்தி டாத இ சைஞா னி இளைய ராஜா வின் குடு ம்ப புகைப் படங்க ள் உ ள் ளே ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இசைஞானி இளையராஜாவை மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும் . அப்படி கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கினார் இளையராஜா . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது . பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து 16 வயதினிலே ,

நிழல்கள் ,அலைகள் ஓய்வதில்லை ,அக்னி நட்சத்திரம் ,வருஷம் 16 ,கரகாட்டக்காரன் ,சிந்து பைரவி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இளையராஜா . குறிப்பாக இந்த படத்திற்கு எல்லாம் தேசிய விருது உட்பட தமிழ்நாடு மாநில அரசு விருதையும் வென்றார் இளையராஜா.

அதுவும் அப்போது புதிய நடிகர்களாக இருந்தாலும் சரி , முன்னணி நடிகர்களாக இருந்தாலும் சரி இவருடைய இசை என்றால் கண்டிப்பாக அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து விடும் என்று கூறுவார்கள்.  இதனாலேயே பல வருடங்களாக இளையராஜாவை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ,

தெலுங்கு ,மலையாளம்,  ஹிந்தி என்று இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா . இதனிடையே  ஜீவா என்பவரை திருமணம் செய்து கொண்ட இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா , யுவன் சங்கர் ராஜா என்ற இரண்டு மகன்களும்  , பவதாரணி என்ற ஒரு மகளும் உள்ளனர் .

இதில் எல்லோருமே இசைத்துறையில் வல்லவர்களாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத இசைஞானி இளையராஜாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *