April 28, 2024

ஜோடி பொருத்தம் சூப்பர் ..!! “மஞ்சள் வீரன்” கதாநாயகியை அறிமுகம் செய்த “டிடிஎஃப்” வாசன் ..!! ட்ரெண்டாகும் புகைப்படங்கள் ..!!

தமிழ்நாட்டை கலக்கி வரும் முக்கிய யூடியூபர்களின் ஒருவர்தான் டிடிஎஃப் வாசன் . இன்னும் சொல்லப்போனால் தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் யூடியூபராக இருந்து வருகிறார் டிடிஎஃப் வாசன்.  ஆரம்பத்தில் பைக் ரைடு செல்வதை வீடியோவாக எடுத்து யூடியூபில் போட்டு பிரபலமானார் டிடிஎஃப் வாசன் . இதன் மூலம் இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தார்கள் . ஆனால் இதன் பிறகு தான் இவர் ,

மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார் . அதாவது இவர் இளைஞர்களை தவறாக நடத்துகிறார் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டது . அது மட்டுமல்லாமல் சமீபத்தில் பெரிய விபத்தில் சிக்கி நூலிலையில் உயிர் தப்பியிருந்தார் . மேலும் டிடிஎஃப்  வாசன் விபத்து நடப்பதற்கு முன்பே,

மஞ்சள் வீரன் என்ற படத்தில் கமிட் ஆகி இருந்தார் . இந்த படத்தை திருவிக பூங்கா என்ற படத்தை இயக்கிய இயக்குனர் செல் அம் இயக்க உள்ளார் . இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இதை அடுத்து இந்த படத்தின் கதாநாயகியை ,

அறிமுகம் செய்து வைத்துள்ளார் டிடிஎஃப் வாசன் . அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஷாலின் ஜோயா தான். இவர்  தமிழில் வெளியான ராஜா மந்திரி , கண்ணகி  போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.  மேலும் இவர் அதிகம் மலையாள மொழி படங்களில் தான் நடித்திருக்கிறார் ,

என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி இருக்கும் நிலையில் தன் படத்தின் கதாநாயகியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் டிடிஎஃப்  வாசன் . இதை பார்த்த ரசிகர்கள் ஜோடி பொருத்தம் சூப்பர் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *