May 10, 2024

100 கோடி பட்ஜெட் ..!! 4 வருடங்கள் கழித்து இயக்குனர் அவதாரம் எடுக்கும் சேரன் ..!! ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க ..!!

சேரன் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் ,தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சேரன் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான பாரதிகண்ணம்மா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பொற்காலம் ,வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி ,ஆட்டோகிராப் ,தவமாய் தவமிருந்து ,

போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் இயக்குனர் சேரன் . குறிப்பாக இவருடைய படங்களுக்கு குடும்ப ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் இருக்கும் . இதனாலேயே இவருடைய ஒவ்வொரு படங்களும் சூப்பர் ஹிட் அடிக்கும் .

ஆனால் கடந்த நான்கு வருடங்களாக எந்த ஒரு படங்களையும் இயக்காமல் நடிப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வந்தார் சேரன்.  இப்படி இருக்கும் நிலையில் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனராக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம் சேரன் .  அந்த வகையில் ,

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப்பை  வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம்  இயக்குனர் சேரன்.  கிச்சா சுதீப் நான் ஈ , பாகுபலி போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் . மேலும் குடும்பக்கதைக்கள ங்களை இயக்கி பிரபலமான ,

இயக்குனர் சேரன் இப்படி ஒரு முன்னணி நடிகரை வைத்து எந்த மாதிரி கதை களத்தில் படம் எடுக்கப் போகிறார்.?  என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர் . அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *