ஆடியோ உரிமம் மட்டும் இத்தனை கோடியா..?? போதும் போதும் என்கிற அளவுக்கு எக்கசக்கமான அப்டேட்கள் ..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

0

இப்போது   எங்கு   திரும்பினாலும்   தளபதி   67   திரைப்படத்தைப்   பற்றிய   பேச்சு   தான் அதிகமாக   இருக்கிறது.  அந்த   அளவுக்கு   இந்தப்   படத்திற்கான   எதிர்பார்ப்பு   ரசிகர்கள் மத்தியில்   அதிகமாகி   இருக்கிறது.  அந்த   வகையில்   இந்த   வார   ஆரம்பத்தில்   இருந்தே   தளபதி   67   பற்றிய ஒவ்வொரு   அப்டேட்டுகளும்   மரண   மாஸாக   வெளிவந்து   கொண்டிருக்கிறது.   அதிலும் நேற்று   வெளியான   இப்படத்தின்   பூஜை   குறித்த   வீடியோ   சோசியல்   மீடியாவில் ட்ரெண்டாகி   வருகிறது.   மேலும்   இந்த   படத்தில்   நாம்

எதிர்பார்க்காத   அளவுக்கு   ஏராளமான    நட்சத்திர   பட்டாளங்கள்    கமிட் ஆகியுள்ளனர்.  அதிலும்   திரிஷா,   அர்ஜுன்,   சஞ்சய்   தத்,   மிஷ்கின்,   கௌதம்   வாசுதேவ்   மேனன்,   மன்சூர் அலிகான்   உள்ளிட்ட   பல   நட்சத்திரங்கள்   ரசிகர்களின்   ஆவலை   தூண்டி   இருக்கின்றனர். இந்நிலையில்    இந்த   படத்தின்    ஆடியோ   ரைட்ஸ்   பற்றி   வெளிவந்துள்ள

தகவல்கள்   பலருக்கும்  ஆச்சரியத்தை   ஏற்படுத்தியுள்ளது  . அதாவது    இதுவரை   எந்த ஹீரோவின்  படத்திற்கும்  இல்லாத  அளவுக்கு   தளபதி   67  பட   ஆடியோ   ரைட்ஸ்    அதிக விலைக்கு   வியாபாரம்    ஆகி  இருக்கிறது.  அந்த   வகையில்   தளபதி   67    திரைப்படத்தின் ஆடியோ   உரிமையை   சோனி   மியூசிக்   பல கோடி   ரூபாய்   கொடுத்து  கைப்பற்றி இருக்கிறது.

அதாவது   கிட்டத்தட்ட    16   கோடி  ரூபாய்க்கு   இப்படத்தின்   ஆடியோ   உரிமை   விற்பனையாகி இருக்கிறது.   ஏற்கனவே  இந்த  படத்தின்   பிரீ   பிசினஸ்   வியாபாரமே   பரபரப்பை   கிளப்பிய நிலையில்   இந்த   செய்தியும்  ஆச்சரியத்தை   ஏற்படுத்தி   உள்ளது. இதை   வைத்து  பார்க்கும் பொழுது  படக்குழு   மொத்த பட்ஜெட்   பணத்தையும்  இப்போதே

வசூலித்து   இருக்கும்  என்ற   ரீதியிலும்   பேச்சுக்கள்   கிளம்பியுள்ளது.  அந்த   அளவிற்கு   த ளபதி 67   திரைப்படம்   ஒவ்வொரு  விஷயத்திலும்   மிரள   வைக்கிறது.   இது  மட்டுமல்லாமல் ரசிகர்கள்   போதும்   போதும்   என்கிற   அளவுக்கு   இன்னும்   எக்கசக்கமான   அப்டேட்கள் அடுத்தடுத்து   வெளிவர   இருக்கிறதாம்.  அந்த  வகையில்   நேற்று    வெளியான

 

பட பூஜை   வீடியோவை   தொடர்ந்து  இன்று   படத்தின்    டைட்டில்   பற்றிய   அறிவிப்பு   ப்ரோமோ வீடியோ   மூலம்   வெளியாகும்   என்று   எதிர்பார்க்கப்படுகிறது.  இது   விக்ரம்    திரைப்படத்தின் டீசரை   விட   படுமாசாக   இருக்குமாம்.   இதற்காக   தற்போது   விஜய்   ரசிகர்கள்  மிகவும் ஆர்வத்துடன்   காத்துக்   கொண்டிருக்கின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.