April 28, 2024

“லவ் டுடே” பிரதீப்புக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ..!! அடுத்த படத்தின் கதாநாயகி இவரா ..?? அக்கட தேசத்தில் இருந்து பறந்து வந்த இளஞ்சிட்டு..!!

பிரதீப் ரங்கநாதன் ஓர் வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற படத்தின்  மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் பிரதீப் ரங்கநாதன் .

இதனால் இவருடைய இரண்டாவது படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது . அப்படி கடந்த வருடம் இவருடைய இயக்கத்தில் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லவ் டுடே.  தற்போது காதலர்களுக்கு இடையே நடக்கும் விஷயத்தை காமெடியும் செண்டிமெண்டும் கலந்து,

இயக்கியிருந்தார் பிரதீப் ரங்கநாதன் . ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதனால் இந்த படத்தின் மூலம் ஒரு நடிகராகவும் வெற்றி கண்டார் பிரதீப் ரங்கநாதன் . இதை தொடர்ந்து அடுத்ததாக ,

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள எல்ஐசி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் பிரதீப் ரங்கநாதன்.  இந்த படத்தில் வில்லனாக நடிகர் எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . அதோடு இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ,

இளம் நடிகையான கீர்த்தி செட்டி நடிக்க உள்ளாராம்.  தற்போது இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *