April 30, 2024

என்னை மட்டும் ரசியுங்கள்..!! ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த பிக்பாஸ் மாயா ..!! கழுவி ஊத்தும் ரசிகர்கள் ..!!

மாயா கிருஷ்ணன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார் . ஆரம்பத்தில் மாடலாக இருந்து வந்த மாயா கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தொடரி ,சர்வர் சுந்தரம் ,மகளிர் மட்டும் ,வேலைக்காரன், 2.0 போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே ,

பெரிய அளவில் பிரபலமானது கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் தான்.  பின்னர் இந்த  படத்தை தொடர்ந்து லியோ ,துருவ நட்சத்திரம் போன்ற  படங்களில் நடித்திருந்தார் மாயா . இதைஅடுத்து பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார் மாயா . மேலும் ஆரம்பத்தில் ,

இருந்தே  ரசிகர்களுக்கு பிடிக்காத போட்டியாளராகவே இருந்து வந்தார் மாயா . மேலும் இவர் எப்போதே எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேறி இருக்கணும்.  ஆனால் விஜய் டிவி இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வந்தது.  இந்நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை அர்ச்சனா ,

வென்றுவிட்டார் . இப்படி இருக்கும் நிலையில் வெளியே வந்த மாயா தன்னுடைய ரசிகர்களுக்கு உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அந்த 15 நாட்கள் மரண படுக்கையிலும் மறக்காது, உங்களுக்காக தான் நான் வேலை பார்க்க போறேன், எல்லாமே உங்களுக்கு தான் .

எனக்கு ஒரே ஒரு ஆசை ,என் ரசிகராக நீங்கள் இருந்தால், என்னை மட்டும் ரசியுங்கள் ,மற்றவர்களையும் ரசியுங்கள் , ஆனால் யாரையும் வெறுக்காதீர்கள் போற்றுவர் போற்றட்டும் ,தூற்றுவர் தூற்றட்டும் அன்புடன் மாயா என்று பதிவிட்டு இருந்தார் .இதோ அந்த பதிவை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *