April 21, 2024

69 வயதாகியும் அந்த ஆசை அடங்கலையா ..?? அவசர அவசரமாக அமெரிக்கா சென்ற கமல்ஹாசன் ..!!

உலகநாயகன் கமல்ஹாசன் இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.  மேலும் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் இன்று பல நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார் . மேலும் சில வருடங்களுக்கு முன்பு இவருடைய நடிப்பில் வெளியான எந்த படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

ஆனால் விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் மார்க்கெட் அப்படியே உச்சத்தை தொட்டது என்று தான் சொல்ல வேண்டும்.  விக்ரம் படத்தை முடித்த கையோடு இந்தியன் 2 , தக் லைப், கல்கி என்று அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் கமல்ஹாசன்.

இன்னும் சொல்ல போனால் கமல்ஹாசனை பொருத்தவரை சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே  கொட்ட வேண்டும் என்று தான் நினைப்பார் . குறிப்பாக தமிழ் சினிமாவிற்கு பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வைத்த பெருமை கமலையே சேரும்.

இப்படி இருக்கும் நிலையில் 69 வயதாகும் கமலுக்கு இன்னும் சினிமா வெறி அடங்கவில்லையாம்.  அந்த வகையில் தற்போது படப்பிடிப்பில் பிசியாக இருந்து வரும் கமல்ஹாசன் திடீரென அமெரிக்கா சென்று இருக்கிறாராம் . அதற்கு காரணம் கதர் ஆடையை மேம்படுத்தும் வகையில்,

கமல்ஹாசன் ஒரு தொழில் செய்து வருகிறார் . அதற்கான விளம்பரப் படங்களில் கமல்ஹாசன் தான் மாடலாக இருந்து வருகிறார் . இதை முடித்த கையோடு சினிமாவில் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அமெரிக்கா சென்றிருப்பதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *