April 28, 2024

கமலிடம் ஜாக்கிரதையாக இருங்க..!! பல வருடங்களுக்கு முன்பே ..!! உலகநாயகனின் முகத்திரையை கிழித்த மணிவண்ணன் ..!! என்ன இப்படி சொல்லிட்டாரு ..??

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி . கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது . இதை அடுத்து தற்போது ஏழாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.  மேலும் இந்த சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார் .

ஆரம்பத்தில் தராசு போல தவறு செய்பவர்களின் நியாயத்தையும் , தவறையும் சுற்றிக்காட்டி வந்தார் கமல்ஹாசன் . ஆனால் இந்த சீசனில் தன்னுடைய அரசியல் லாபத்திற்காகவும் , தன்னைச் சார்ந்த மக்களுக்காக மட்டுமே பிக் பாஸ் மேடையை பயன்படுத்தி வருகிறார் கமல்ஹாசன்.

அது மட்டுமல்லாமல் போட்டியாளர்களிடமும் பாரபட்சம் பார்க்கிறார் கமல்ஹாசன் . இதனால் பலரும் கமல்ஹாசன் மாறிவிட்டார் என்று கூறி வந்தனர் . ஆனால் இதையெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே வெளிப்படையாக போட்டு உடைத்து இருக்கிறார் நடிகரும் ,

இயக்குனருமான மணிவண்ணன்.  அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கமல் குறித்து மணிவண்ணன் கூறியதாவது,  கமல்ஹாசன் தமிழனும் கிடையாது,  இந்தியனும் கிடையாது ,அவர் தேவைப்பட்டால் பெரியாரைப் பற்றி பேசுவார் .

நீங்கள் எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்க . ஏனென்றால் அவர் ஒரு ஐயங்கார் , அதனால் தான் தசாவதாரம் ,விஸ்வரூபம் என்று படம் எடுத்தார் ஏன் , மற்ற கடவுள்கள் யாருமே அவதாரம் எடுக்கவில்லையா என்று கூறியிருந்தார் நடிகர் மணிவண்ணன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *