May 9, 2024

தன்னுடைய ஐந்து குழந்தைகளையும் காட்டிய பாலா ..!! இவரோட மனசு யாருக்கும் வராது ..!! புகைப்படத்துக்கு குவியும் வாழ்த்துக்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியால் கண்டுபிடிக்கப்பட்ட தரமான பிரபலங்களில் ஒருவர் தான் கே பி ஒய் பாலா . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார் பாலா . குறிப்பாக இவருடைய டைமிங் காமெடியால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது என்று தான் சொல்ல வேண்டும் .

இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அந்த வகையில் தமிழில் வெளியான ஜூங்கா, தும்பா, புலிகுத்தி பாண்டி ,லாபம் ,பிரண்ட்ஷிப் ,ஆன்ட்டி இந்தியன், தேஜாவு , கோஷ்டி, ரன் பேபி ரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் கே பி ஒய் பாலா .

இதையடுத்து இவர் அண்மைக்காலமாக செய்து வரும் உதவிகள் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி வருகிறது.  அந்த வகையில் மலைவாழ் மக்களுக்காக இலவச  ஆம்புலன்ஸ் கொடுத்து உதவியது , சென்னை வெள்ளத்தில் மிகுந்த மக்களுக்கு,

5 லட்சம் கொடுத்து உதவியது என்று தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு தான் வருகிறார் பாலா .  இந்நிலையில் இதுவரை ஐந்து இலவச ஆம்புலன்ஸ்களை பொதுமக்களுக்காக வாங்கி கொடுத்திருக்கிறார் பாலா . தற்போது அந்தப் புகைப்படங்களை பகிர்ந்து ,

அதில் என்னுடைய ஐந்து குழந்தைகளுடன்  என்று குறிப்பிட்டுள்ளார் பாலா.  இதைப் பார்த்த பிரபலங்கள் ரசிகர்கள் பாலாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *