April 26, 2024

சினிமா நிழலே படாமல் மகளை வளர்த்த தலைவாசல் விஜய் ..!! பதக்கங்களை குவித்து அப்பாவுக்கு பெருமை சேர்த்த மகள் ..!! வெளிவந்த புகைப்படங்கள் ..!!

தலைவாசல் விஜய் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார்.  கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான தலைவாசல் என்ற படத்தின்  மூலம் நடிகராக அறிமுகமானார் விஜய் . இதன் பிறகு தான் தலைவாசல் விஜய் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அமராவதி ,திருடா திருடா, காதல் கோட்டை, மகாநதி ,தேவர் மகன் ,காதலுக்கு மரியாதை,

போன்ற பல சூப்பர் ஹிட் படங்களின் அடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் தலைவாசல் விஜய்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் பல நடிகர்களுக்கு பின்னணி கூறலும் கொடுத்திருக்கிறார் நடிகர் தலைவாசல் விஜய் . இதனிடையே திருமணமான தலை வாசல் விஜய்க்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இதில் தலைவாசல் விஜய்யின் மகளான ஜெயவீனா ஒரு நீச்சல் வீராங்கனை ஆவார்.

இதுவரை பல பதக்கங்களை குவித்திருக்கிறார் . மேலும் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களுடைய மகளை எப்படியாவது நடிகையாக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும்போது தன்னுடைய மகளை சினிமா நிழல் கூடப்படாமல் ,

அவருடைய விருப்பப்படியே வளர்த்தது மட்டுமில்லாமல் அவர் ஆசைப்பட்ட ஒருவரையே திருமணமும் செய்து வைத்திருக்கிறார் தலைவாசல் விஜய்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *