April 28, 2024

பிறந்து 41 நாட்களிலேயே நடிக்க வந்த குழந்தை ..!! இன்று தவிர்க்க முடியாத நடிகையாக இருக்கும் பிரபலம் ..!! இவரா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் பிறந்து 41 நாட்களிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  இருக்கிறார் பிரபல நடிகை ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகை சுஜிதா தான் . பிறந்து 41 நாட்களிலேயே அப்பாஸ் என்ற படத்தில் நடிகை  கே ஆர் விஜயாவுக்கு பேத்தியாக நடித்திருந்தார் சுஜிதா . இதன் பிறகு  இயக்குனர் பாக்யராஜ் நடிப்பில் வெளியான  முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகமானார் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து புதுமுகம், பூவிழி வாசலிலே, காதல் பரிசு ,மனிதன் , பாடு நிலாவே போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் நடிகை சுஜிதா . இப்படி குழந்தை நட்சத்திரமாக  கலக்கி கொண்டு வந்த நடிகை  சுஜிதா ஒரு கட்டத்தில்,

வளர்ந்ததும் தமிழ் படங்களில்  சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் . அப்படி பல படங்களில் நடித்து இருந்தாலும்  கூட இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியல் மூலம் தான் . இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில்,

நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார் நடிகை சுஜிதா .மேலும் இவர் தமிழ் மொழி சீரியல் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி சீரியல்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே தனுஷ் என்பவரை,

திருமணம் செய்து கொண்ட சுஜிதாவுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.இதைப் பார்த்த ரசிகர்கள் பிறந்து 41 நாட்களிலேயே சினிமாவிற்கு வந்துவிட்டாரா என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர் …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *