April 29, 2024

சமந் தாவு க்கு விரை வில் இ ரண் டாம் திரு மண மா ..?? அது வும் மாப் பிள்ளை இந்த நடிக ரா ..?? வெளி வந்த புகை ப்படத் தால் ஷாக் கான ரசி கர்க ள் ..!!

சமந்தா ஓர் தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் ஆவார்.  தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நடிகை சமந்தா கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நீதானே என் பொன் வசந்தம் ,அஞ்சான், கத்தி, தங்க மகன், தெறி ,மெர்சல், சீம ராஜா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்,

நடிகை சமந்தா . அதுவும் தமிழ் ரசிகர்களின் கனவுகன்னியாகவும் இருந்து வந்தார் நடிகை சமந்தா . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா . ஆனால் திருமணமான நான்கு வருடங்களிலேயே இருவரும் ,

கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் .  இப்படி இருக்கும் நிலையில் நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்திருந்தார்  நடிகை சமந்தா .

இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது . குறிப்பாக இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் இருவரும் நெருக்கமாக இருந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் விஜய் தேவரகொண்டா  தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் ஒரு பெண்ணின் கையை பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக கூடிய விரைவில் இது குறித்து அறிவிப்பேன் என்றும் அதில் கூறியிருந்தார்  நடிகர் விஜய் தேவரகொண்டா . இதனால் இவர் சமந்தாவை திருமணம் செய்யப் போகிறாரா இல்லை வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்ளப்போகிறாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *