May 2, 2024

நான் இப்போதும் குழந்தை தான் ..!! சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்த பிரபல நடிகர் ..!! இவரா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் கௌதம் கார்த்திக் . நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்று இருந்தார் நடிகர் கௌதம் கார்த்திக் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ரங்கூன், இவன் தந்திரன் , தேவராட்டம், பத்து தல , ஆகஸ்ட் 16 1947  போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது . குறிப்பாக தேவராட்டம் படத்தில் நடிக்கும் போது சக நடிகையான,

நடிகை  மஞ்சிமா மோகன் மீது காதல் வயப்பட்டார் நடிகர் கௌதம் கார்த்திக் . பின்னர் பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் . மேலும் திருமணத்துக்கு பிறகும்,

பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் கௌதம் கார்த்திக்  . இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக தன்னுடைய குழந்தை பருவ புகைப்படத்தை பதிவிட்டு “நான் இன்னும் மாறவில்லை என்று தான் நினைக்கிறேன்” என்று ,

கூறியிருந்தார் நடிகர் கௌதம் கார்த்திக்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *