April 28, 2024

அந்த நடிகை எனக்கு பொண்ணு மாதிரி ..!! அவருடன் என்னால் நடிக்க முடியாது ..!! வெளிப்படையாக சொல்லிய விஜய் சேதுபதி ..!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் விஜய் சேதுபதியின் பாதை மட்டும்  கொஞ்சம் வித்தியாசமானது என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி தற்போது வில்லன் கதாபாத்திரம் ,குணசத்திர கதாபாத்திரம் என்று கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் ஸ்கோர் செய்து வருகிறார்.  அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழ் சினிமா உலகில் பிசியான நடிகராகவும்,

இருந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி . அதோடு தற்போது இவர் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , ஹிந்தி எனபல மொழி படங்களிலும் கலக்கி கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் அந்த நடிகை என்னுடைய மகள் மாதிரி , அவருடன் என்னால் ,

நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம் நடிகர் விஜய் சேதுபதி.  அவர் வேறு யாருமில்லை தெலுங்கு நடிகையான கீர்த்தி செட்டி தான். தற்போது தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத இளம் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி செட்டி . இதையடுத்து  கடந்த 2021 ஆம் ஆண்டு ,

தெலுங்கு மொழியில் வெளியான உப்பண்ணா என்ற படத்தில் கீர்த்தி செட்டிக்கு தந்தையாக நடித்திருந்தார்  நடிகர்  விஜய் சேதுபதி.  இதன்பிறகு தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமான ஆனாராம்  நடிகை  கீர்த்தி செட்டி.  ஆனால் ,

நடிகர் விஜய் சேதுபதி அவருக்கு நான் அப்பாவாக நடித்து விட்டேன்.  அதனால் அவர் எனக்கு மகள் மாதிரி , அப்படி இருக்கும்போது அவருடன் எப்படி என்னால் டூயட் பாட முடியும் என்று கூறி மறுத்துவிட்டாராம்  நடிகர் விஜய் சேதுபதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *