April 25, 2024

3 வருட காதல் ..!! காதலியை கரம்பிடித்த ” வானத்தை போல ” சீரியல் ராஜபாண்டி ..!! வைரலாகும் திருமண புகைப்படங்கள் ..!!

சமீப காலமாக சினிமா நடிகர்களுக்கு இருக்கும் வரவேற்பு சீரியல் நடிகர்களுக்கும் இருக்கிறது . அப்படி சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் வானத்தைப்போல என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் அஸ்வின் கார்த்தி . கடந்த 2020 ம் ஆண்டிலிருந்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகர் அஸ்வின் கார்த்தி.

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் நடிகர் அஸ்வின் கார்த்தி.  பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து குலதெய்வம், பிரியமானவள் ,கல்யாண முதல் காதல் வரை, அரண்மனைக்கிளி போன்ற பல சீரியல்களில்,

நடித்திருந்தார் நடிகர் அஸ்வின் கார்த்தி . இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது வானத்தைப்போல சீரியல் தான் . இப்படி இருக்கும் நிலையில் காயத்ரி என்பவரை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார் நடிகர் அஸ்வின் கார்த்தி.

இப்படி இருக்கும் நிலையில் நேற்று இவருடைய திருமணம் கோலாகலமாக நடந்திருக்கிறது . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அஸ்வினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *