May 6, 2024

5 அடுக்கு கேக் ..!! 51 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரோஜா ..!! வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள் ..!!

ரோஜா ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார் . கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான செம்பருத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரோஜா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, அதிரடிப்படை ,அசுரன், ஆயுத பூஜை, தமிழ்ச்செல்வன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ,ஹவுஸ் ஃபுல் ,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ரோஜா.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான ஆர்கே செல்வமணியை ,

திருமணம் செய்து கொண்டார் ரோஜா . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். மேலும் திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்துக் கொண்டு வந்த ரோஜா ஒரு கட்டத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேர அரசியல்வாதியாகவே மாறிவிட்டார் . அந்த வகையில் தற்போது ,

ஆந்திராவில் அமைச்சராக இருந்து வருகிறார் நடிகை ரோஜா.  இப்படி இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய 51 வது பிறந்தநாளை தன்னுடைய குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார் நடிகை ரோஜா  அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *