April 28, 2024

படத்தில் தான் மலைவாழ் பொண்ணு ..!! நிஜத்தில் செம மாடர்னான பொண்ணு ..!! ரசிகர்களை மயக்கும் ” ஜிகர்தண்டா 2 ” நடிகை ..!!

கடந்த தீபாவளிக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் . இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா,  சைன் டாம் சாக்கோ ,இளவரசு, நவீன் சந்திரா ,சத்யன், அரவிந்த் ஆகாஷ், சஞ்சனா நடராஜன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் ,

நடிகை நிமிஷா சஜயன் .  இந்த படத்தில் மலைவாழ் பெண்ணாகவே வாழ்ந்திருந்தார் நடிகை நிமிஷா சஜயன் . கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மலையாள படத்தின் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கினார் நிமிஷா சஜயன் . பின்னர் இவர் நடித்த எல்லா திரைப்படங்களுமே,

ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இப்படி மலையாள சினிமாவில் கலக்கி கொண்டு வந்த நிமிஷா சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . இதை தொடர்ந்து தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

இப்படி இருக்கும் நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் மலைவாழ் பெண்ணாக கலக்கிய நிமிஷாவின்  மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இவர் தான் ஜிகர்தண்டா படத்தில் மலைவாழ் பெண்ணாக நடித்ததா  என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *