April 29, 2024

நல்ல படம் கண்டிப்பாக ஜெயிக்கும் ..!! வசூலில் சக்கைபோடு போடும் ஜிகர்தண்டா 2 ..!! நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா ..??

கடந்த பத்தாம் தேதி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் . கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.  இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா ,நிமீசா சஜயன் ,நவீன் சந்திரா, சைன் டாம் சாக்கோ, இளவரசு ,

சத்யன் ,அரவிந்த் ஆகாஷ், சஞ்சனா நடராஜன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார் . மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது,

என்றுதான் சொல்ல வேண்டும்.  இன்னும் சொல்லப்போனால் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குக்கு மட்டும் கிடையாது என்பதை இந்த திரைப்படம் அழுத்தமாக பேசி இருக்கிறது . இதனால் இந்த படத்தை பார்ப்பதற்காக குடும்பம் குடும்பமாக செல்கிறார்கள் ரசிகர்கள் .

குறிப்பாக இந்த படத்தில் ராகவா லாரன்ஸும் எஸ் ஜே சூர்யாவும் போட்டி போட்டு நடித்துள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் நாலாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் 100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ,

நாலாவது நாளில் 32 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  இதனால் வரும் நாட்களில் ஜிகர்தண்டா 2 திரைப்படம் நல்ல வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *