April 30, 2024

எனக்கு இந்த ஒரு உதவி மட்டும் பண்ணுங்க ..!! கோரிக்கை வைத்த “கரகாட்டக்காரன்” கனகா ..!! தமிழக அரசு இதை நிறைவேற்றுமா..??

90 களில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக கலக்கி கொண்டு வந்தவர் தான் நடிகை கனகா.  மூத்த நடிகையான தேவிகாவின் மகளான கனகா கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படி இவர் நடித்த முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தங்கமான ராசா,

பெரிய இடத்துப் பிள்ளை ,அதிசய பிறவி ,கும்பக்கரை தங்கையா ,கோயில் காளை, பெரிய குடும்பம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை கனகா.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்,

என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழ் சினிமாவையே கலக்கி கொண்டு வந்த  நடிகை கனகா கிட்டத்தட்ட 17 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.  அது மட்டுமல்லாமல் வெளியில் கூட தலை காட்டாமல் இருந்து வந்தார் நடிகை கனகா . இந்நிலையில் சமீபத்தில்,

நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்து இருந்தார் . அப்போது பேசிய கனகா,  என்னுடைய ஒரு இடம் அரசு ஆக்கிரமித்து வைத்திருக்கிறது.  அதை மட்டும் எனக்கு வாங்கி கொடுங்கள் வேறு எதுவுமே எனக்கு வேண்டாம் என்று குட்டி பத்மினியிடம் கூறினாராம் .

இதை தமிழக அரசு நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் கனகாவை பார்த்த ரசிகர்கள் ஒரு காலத்தில் எப்படி இருந்த நடிகை ,இப்ப இப்படி மாறிவிட்டாரே என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *