April 27, 2024

பல தடைகளை மீறி மேலே வந்த ..!! ” விஜய் டிவி ” அறந்தாங்கி நிஷாவின் குடும்ப புகைப்படங்கள் இதோ ..!!

அறந்தாங்கி நிஷா ஓர் பிரபலமான விஜய் டிவி பிரபலம் மற்றும் நடிகை ஆவார். ஆரம்பத்தில்  விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிஷா பின்னர் படிப்படியாக மேலே வந்தார் . இதன் பிறகு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கும் வந்தார் அறந்தாங்கி நிஷா . அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான,

மாரி 2 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் அறந்தாங்கி நிஷா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இரும்புத்திரை ,கோலமாவு கோகிலா ,கலகலப்பு 2  ,அநீதி , ஜெயிலர் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் அறந்தாங்கி நிஷா . மேலும் எம்பிஏ படிப்பை முடித்துள்ள,

நிஷா கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.  அப்போது பெண்களுக்கு காமெடி எல்லாம் சரியாக வராது என்று பலரும் கூறினார்களாம்.  ஆனால் அத்தனை தடைகளையும் மீறி தான் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறார் அறந்தாங்கி நிஷா.

இவருக்கு பலமே அவருடைய குடும்பமும், கணவரும் , மாமியாரும் தானாம்.  இதனிடையே திருமணம் செய்து கொண்ட நிஷாவுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத அறந்தாங்கி நிஷாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *