April 28, 2024

லியோ ஒரு குப்பை படம் …!! நான் மீசையை எடுக்க மாட்டேன் ..!! அப்படியே அந்தர் பல்டி அடித்த மீசை ராஜேந்திரன் ..!!

மீசை ராஜேந்திரன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட துணை காமெடி நடிகர் ஆவார் . இதுவரை பல திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்திருந்த மீசை ராஜேந்திரன் சில மாதங்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் லியோ திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்து விட்டால் , என்னுடைய மீசையை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று சவால் விட்டிருந்தார் .

இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் அப்ப மீசை எடுக்க ரெடியாக இருங்கள் என்று மீசை ராஜேந்திரனை கலாய்த்து வந்தனர் . இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட வசூலில் பிரம்மாண்ட சாதனை,

படைத்து வருகிறது . இன்னும் சொல்ல போனால் வரும் நாட்கள் எல்லாம் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை தொடுவதற்கு கூட  வாய்ப்பு உள்ளது என்றும் சினிமா வட்டாரங்களில் கூறிவருகின்றனர் . இதைக் கேள்விப்பட்ட மீசை ராஜேந்திரன் ,

தற்போது அப்படியே அந்தர்பல்டி அடித்துள்ளார்.  அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மீசை ராஜேந்திரன் கூறியதாவது , லியோ சரியான குப்பை படம் . கண்டிப்பாக இந்த திரைப்படம் ஜெயிலர் படத்தை முறியடிக்காது என்று கூறியது மட்டுமல்லாமல் லியோ திரைப்படம் ,

சூப்பர் ஸ்டாரின் 2.0 படத்தின் 800 கோடி வசூலை முறியடிக்க வேண்டும் என்றும் , அப்படி 800 கோடி வசூல் செய்த பிறகு விஜய்யே வந்து என்னிடம் சொன்னால் என்னுடைய மீசையை எடுப்பேன் , அதுவரை நான் மீசையை எடுக்கமாட்டேன்  என்று கூறியிருந்தார் மீசை ராஜேந்திரன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *