April 29, 2024

சினிமாவில் எதிரிகள் ..!! நிஜத்தில் தோழிகள் ..!! நயன்தாராவும், திரிஷாவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ..!!

தமிழ் சினிமாவில் ரஜினி -கமல் , விஜய்- அஜித் என்று சொல்வது போல நடிகைகளில் நயன்தாரா- திரிஷா தான் இரு துருவ நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர் . அந்த வகையில் திரிஷா கடந்த 2000ம் ஆண்டு வெளியா மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  நயன்தாரா 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இப்படி இருவரும் ஒரே காலகட்டத்தில் அறிமுகமானதால் இருவருக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது.  இன்னும் சொல்லப்போனால் 40 வயதை கடந்தும் கூட இவர்கள் இருவரும் மட்டும்தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிக்கொண்டு,

வருகின்றனர்.  குறிப்பாக இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . அது மட்டுமல்லாமல் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ,

புதிய திரைப்படத்தில் நயன்தாராவும்,  திரிஷாவும் ஒன்றாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . என்னதான் இவர்கள் இருவரும் சினிமாவில் எதிரிகளை போல போட்டி போட்டுக் கொண்டாலும்,  நிஜ வாழ்க்கையில் நல்ல தோழிகளாகவே இருந்து வருகின்றனர் .

அந்த வகையில் இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  இதோ அந்தப் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *