April 25, 2024

நான் மட்டும் முதலமைச்சர் ஆனால் ..!! கண்டிப்பாக இதை செய்வேன் ..!! முன்கூட்டியே வாக்குறுதி கொடுத்த விஜய் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . தற்போது இவர்  லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் அண்மைக்காலமாக விஜய் அரசியலுக்கு வருவதற்காக பல நல்ல விஷயங்களை செய்து வந்தார் . இப்படி இருந்த நிலையில் ,

கடந்த சில தினங்களுக்கு முன்பு ” தமிழக வெற்றி கழகம் ”  என்ற தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்.  மேலும் இன்னும் இரண்டு படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் களமிறங்க உள்ளதாகவும் அறிவித்திருந்தார் நடிகர் விஜய்.

மேலும் ஒரு பக்கம் இவருக்கு வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் குவிந்தாலும் , மறுபக்கம் இவரால் தமிழ்நாட்டை ஆள முடியுமா.?  அந்த தகுதி இவருக்கு இருக்கிறதா.?  என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் . மேலும் நான் வெறும் பொழுதுபோக்கிற்காக அரசியலுக்கு ,

வரவில்லை என்று விஜய் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் கூறியிருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் சில வருடங்களுக்கு முன்பே நான் முதலமைச்சர் ஆனால் இதை கண்டிப்பாக செய்வேன் என்று கூறியிருந்தார் . அந்த வகையில் சர்கார் படத்தின்,

இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் நான் மட்டும் முதலமைச்சர் ஆனால், நடிக்க மாட்டேன், உண்மையாக மட்டும்தான் இருப்பேன் என்று கூறியிருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *