May 5, 2024

குஷ்பூவின் மகளுக்கு யோகத்தை பாருங்க ..!! முதல் படமே இவ்வளவு பெரிய நடிகருடனா ..?? வெளியான புகைப்படத்தை பார்த்து வாழ்த்தும் ரசிகர்கள் ..!!

90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை குஷ்பூ. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான  தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் குஷ்பூ. பின்னர்  குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகை குஷ்பூ .  இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கி கொண்டு வரும் போதே   இயக்குனரும் ,

நடிகருமான சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை குஷ்பூ . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் குஷ்பூவின் மூத்த மகள் விரைவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் . இவரை தொடர்ந்து ,

குஷ்பூவின் இளைய மகளும்  சினிமாவில் அறிமுகமாக உள்ளாராம்.  அந்த வகையில் குஷ்பூவின் இளைய மகளான அனந்திதா கமல்ஹாசனின் 234 வது படத்தில் இணைந்துள்ளாராம் . இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறாராம். இயக்குனர் மணிரத்னம்,

இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் இயக்குனர் மணிரத்னத்துக்கு உதவி இயக்குனராக பணியாற்ற இருக்கிறாராம் குஷ்பூவின் மகள். மேலும் நேற்று கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பூஜை வீடியோ வெளியாகி இருந்தது.

இதைப் பார்த்த ரசிகர்கள் முதல் படமே இவ்வளவு பெரிய நடிகரின் படமா .? குஷ்பூவின் மகளுக்கு அதிர்ஷ்டம் தான் என்று கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *