April 27, 2024

பெண் ரசிகைகளின் கனவுகண்ணன் அப்பாஸா இது ..?? இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க ..!! ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் ..!!

90 களில் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அப்பாஸ் . கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் நடிகர் அப்பாஸ்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இனி எல்லாம் சுகமே ,ஆசை தம்பி, படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ்,

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே ,ஆனந்தம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் அப்பாஸ்.  குறிப்பாக அப்போது  பெண் ரசிகைகளுக்கு ஒரு கனவு கண்ணனாக இருந்து வந்தார் நடிகர் அப்பாஸ் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,

மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் . ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.  இதனால் நடிப்பதை நிறுத்திவிட்டு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார் அப்பாஸ் . இதனிடையே  எரும் அலி என்பவரை,

திருமணம் செய்து கொண்ட அப்பாஸுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அப்பாஸின்  லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *