April 20, 2024

“ஆடுகளம்” ஐரினுக்கு விரைவில் திருமணமா ..?? மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா ..?? புடிச்சாலும் புளியங்கொம்பாக பிடித்துவிட்டாரே ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஆடுகளம்.  இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை டாப்ஸி . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஐரின் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகை டாப்ஸி .

பின்னர்  இந்த படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளியான வந்தான் வென்றான் ,அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் ,ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 2 ,விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான அனபெல்லா சேதுபதி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் .

மேலும் நடிகை டாப்ஸி தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் அண்மை காலமாக ஹிந்தி மொழி படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நடிகர் டாப்ஸி.

இப்படி இருக்கும் நிலையில் தற்போது 36 வயதாகும் டாப்ஸி விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம்.  அந்த வகையில் முதல் முறையாக தன்னுடைய காதலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் நடிகை டாப்ஸி.  கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக டென்மார்க்கை,

சேர்ந்த பேட்மிட்டன் வீரர் ஒருவரை காதலித்து வந்தாராம் நடிகை டாப்ஸி.  இதனால் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் , இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் நடிகை டாப்ஸி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *