April 28, 2024

500 கோடியும் இல்ல , 600 கோடியும் இல்ல ..!! லியோ படத்தின் உண்மையான வசூல் இது தான் ..!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த லோகேஷ் கனகராஜ் ..!!

கடந்த வியாழக்கிழமை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ.  பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் நடிகர் விஜய்.  இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய்தத் ,அர்ஜுன் ,திரிஷா ,கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் ,மடோனா செப்பாஸ்டிங் ,ஜார்ஜ் மரியான் ,மன்சூர் அலிகான் ,

பிரியா ஆனந்த் ,மேத்யூ தாமஸ் , பாபு ஆண்டனி , சாண்டி மாஸ்டர் போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே  பெற்று வருகிறது . ஆனால் இது விஜய் படங்களுக்கு எப்போதும் ,

நடப்பது தான்.  இருந்தாலும் இந்த திரைப்படம் வசூலில் பிரமாண்ட சாதனை படைத்து வருகிறது . அந்த வகையில் முதல் நாளிலேயே 148 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது லியோ திரைப்படம் . இதனால் கண்டிப்பாக ஜெயிலர் படத்தை லியோ திரைப்படம் ஓரங்கட்டி விடும் ,

என்று பலரும் கூறிவந்தனர் . மேலும் பல நாட்களாக இந்த படத்தின் உண்மையான வசூல் விபரத்தை வெளியிடாமல் இருந்து வந்தார் லியோ தயாரிப்பாளர் , இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் ஏழு நாட்களில் 461 கோடி வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது .

மேலும் இது தெரியாமல் பலரும் லியோ 500 கோடி வசூலித்து விட்டது,  600 கோடி வசூலித்து விட்டது என்று கதை கட்டி வந்தனர்.  தற்போது இந்த அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *